கர்நாடக முதல்வரின் எடுபிடிகளுக்கு மட்டும் ரூ 70 லட்சம் மாதச் சம்பளம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சதானந்தா கவுடாவின் பரிவாரங்கள் தொடர்பாக பெறப்பட்டுள்ள தகவல்கள்:
சட்டப்பேரவையில் உள்ள சதானந்தா அலுவலகத்தில் மட்டும் 237 பேர் பணிபுரிகின்றனர்.
வீட்டில் செயல்படும் அலுவலகத்தில் 21 பேரும் வீட்டில் 29 பேரும் பணியாற்றுக்ன்றனர்.
சட்டப்பேரவையான விதான் சவுதாவில் பணிபுரிவோருக்கு மட்டுமே ஒரு மாதத்துக்கு ரூ56.88 லட்சம் செலவிடப்படுகிறது.
இதில் 24 மணி நேரம் இயங்கி வரும் அவரது பாதுகாவலர்களின் எண்ணிக்கை இடம்பெறவில்லை.
இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் முறையாக நியமிக்கப்பட்டவர்கள் என நினைக்கிறீர்களா? இல்லை...
அதிகாரிகளுக்கும் ஆலோசகர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் யாரெல்லாம் வேண்டியவர்களோ அவர்கள் அனைவருமே அரசாங்க ஊழியர்கள்! அரசு கஜானாவிலிருந்து ஊதியம்!
பல்வேறு துறைகளிலிருந்தும் பல அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் நிவாரண நிதி, கணணிப்பிரிவு, ஊடகப் பிரிவு என ஏகப்பட்ட துறைகளும் தலைமைச்செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படி நியமிக்கப்பட்டவர்களில் அதிகமான ஊதியத்தைப் பெறுபவர் சதானந்தாவின் முதன்மைச் செயலரான ஐ.எஸ்.என். பிரசாத்தான்! இவர் ஒரு மாதத்துக்கு வாங்கும் ஊதியம் ரூ1 லட்சத்து 31 ஆயிரத்து 64 !
இரண்டாவது இடம் லட்சுமி நாரயணா என்ற 2-வது முதன்மைச் செயலர். இவருக்கு சம்பளம் ரூ1 லட்சத்து ஆயிரத்து 532!
3-வது இடம் சதானந்தாவின் பொருளாதார ஆலோசகர் கே.வி. ராஜுவுக்கு! இவரது ஊதியம் ரூ1 லட்சத்து 10 ஆயிரத்து 852 !
முதல்வரின் ஊடக ஆலோசர் ஜகதீஷ் தமக்கு உதவியாக 12 பேரை நியமித்திருக்கிறார். இதேபோல் ஊடக செயலாளர் பரூங்கேஷ் 25 பேரையும் பணிக்கு வைத்துள்ளனர்.
இப்படி ஆள் ஆளுக்கு ஏகப்பட்ட பேரை நியமித்துக் கொண்டு அரசு கருவூலத்தை அம்போவாக்கிக் கொண்டிருக்கிறது சதானந்தா அரசு!
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications