பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா - தமிழில் கேள்விகள் - தொடங்கியது விசாரணை!

முதல்வர் ஜெயலலிதாவின் 'முன்னாள் நண்பர்களான' சசிகலா, இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கோரி சசிகலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே சொத்து சேர்ப்பு வழக்கு இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார் ஜூனையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.
சசிகலா அளித்த பதிலை அவர் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் திரும்ப சொன்னார். தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரிடமும் இன்று மட்டும் 400 கேள்விகள் வரை கேட்டு விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கேள்விகள் அதிகமிருந்தால், நாளை மறுநாளும் விசாரணை தொடரும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications