டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை, வீட்டு முன் எறிந்து சென்ற நபர் - போலீசார் விசாரணை
சென்னை: வேளச்சேரியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற நகைகளை, அதே வீ்ட்டின் முன் எறியப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகைகளை எறிந்து சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி டான்சி நகரை சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி டாக்டர் பாக்கியலட்சுமி உடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி பாக்கியலட்சுமியும், மகளும் வெளியூர் புறப்பட்டு சென்றார். 13ம் தேதி வீடு திரும்பியனர். அப்போது வீட்டு பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் விசாரித்து வந்தனர். டாக்டர் கோபால கிருஷ்ணனின் வீ்ட்டில் வேலை செய்த வேலைக்காரி, மருத்துவமனை நர்சுகள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் டாக்டரின் வீட்டு வாசலில் கருப்பு நில பாலீதின் பை ஒன்று கிடந்தது. கோபாலகிருஷ்ணன் பையை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் தனது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 140 பவுன் நகைகள் இருந்தது.
அதில் அதிர்ச்சியடைந்த டாக்டர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அடையாறு துணை கமிஷனர் (பொறுப்பு) பிரபாகரன், கிண்டி உதவி கமிஷனர் மாணிக்கவேல், வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டு முன் எறிந்து சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications