சங்கரன்கோயிலில் இலவசங்களுக்கு தடை... 10 பறக்கும் படைகள்: தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

Sankaran Koil
சென்னை: சங்கரன் கோயில் தொகுதியில் அரசு நலத் திட்டங்கள், இலவச விநியோகம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று சென்னையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்து விட்டது.

இந்த தொகுதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளது. 12 ஊர்கள் தூத்துக்குடி மாவட்டங்களில் வருகிறது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 870. இதில் ஆண்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 815 பேரும், பெண்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 55 பேரும் உள்ளனர்.

அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளது. எனவே கள்ள ஓட்டு போட வாய்ப்பு இல்லை. என்றாலும் இங்கு அமைக்கப்படும் 242 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தொலை தொடர்பு வசதி இல்லாத வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும்.

எல்லா வாக்குச்சாவடிகளுமே பதற்றமானவைதான்

அனைத்து வாக்குச்சாவடிகளும் பதட்டம் நிறைந்தவைகளாக கருதப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மத்திய துணை ராணுவ படையினர் வர வழைக்கப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்வதை தடுக்க 10 இடங்களில் நிரந்தர சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 பறக்கும் படைகளும் பண வினியோகத்தை தடுக்க அமைக்கப்பட்டுள்ளன.

இலவச அரிசி, மருத்துவ சிகிச்சை போன்ற அரசின் அத்தியாவசிய சலுகைகளை பெற தடைஇல்லை. இலவச மிக்சி, கிரைண்டர், போன்றவற்றை இப்போது வழங்கக்கூடாது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்க தடை இல்லை. புதிதாக அனுமதி வழங்கக் கூடாது.

நகர்புறங்களில் சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டக் கூடாது. கிராம பகுதிகளில் தனியார் இடங்களில் எழுத்துபூர்வமாக அனுமதி பெற்று தான் பேனர் வைக்க முடியும். பொதுத் தேர்தலுக்கு எடுக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளும் இந்த இடைத் தேர்தலிலும் கடைபிடிக்கப்படும். கள்ள ஓட்டு போட்டால் ஒரு வருடம் சிறை என்பதையும் நினைவூட்டுகிறேன்.

வேட்பாளர்கள் 3 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு 5 பேருக்கு மேல் போகக் கூடாது. ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வெளியூர்காரர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.

திருமண மண்டபம், ஓட்டல்களும் கண்காணிக்கப்படுகின்றன. தொகுதி நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய அடுத்த வாரம் சங்கரன்கோவில் செல்வேன். தேர்தல் பார்வையாளர்களும் விரைவில் செல்வார்கள். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகாரிகளை இட மாற்றம் செய்யக் கூடாது. நலத் திட்ட உதவிகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+