For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்லத்தில் பெண் பயணிகளை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர்கள்!

Google Oneindia Tamil News

Kerala Woman
கொல்லம்: ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு அலுவலகத்தில் எழுத்தராக அவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கவிஞரும் கூட.

கொல்லம்-சென்னை ரயிலில் பணிக்கு செல்வது வழக்கம். ரயிலில் பணிக்கு செல்லும் போது டிக்கெட் பரிசோதகர்கள் ஜாபர், பிரவீன் ஆகிய 2 பேரும் வழக்கமாக பயணிக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர்.

இந்த தொல்லையை ஜெயகீதாவும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிறார். பரிசோதகர்களின் அத்துமீறல் அதிகரித்த நிலையில் ரயில்வே மேலாளர் மஜீத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய பரிசோதகர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
At a time when much is discussed about the security of women in the trains, a woman passenger on board the first class compartment of a super fast train had to face harassment by two ticket examiners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X