திருச்சி சிறையில் நடராஜன் அடைப்பு-மார்ச். 2 வரை சிறைக் காவல்

தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன் கைது செய்யப்பட்டார்.
"விளார் கிராமத்தில் பைபாஸ் சாலை அருகே தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுரஅடி நிலத்தை சசிகலா கணவர் நடராஜன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்து கொட்டகை போட்டு உள்ளார்" என்பது ராமலிங்கம் கொடுத்த புகார்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.
திருச்சி சிறையில்..
சென்னை பெசன்ட்நகர் வீட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நடராஜனை இன்று அதிகாலை தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக காவல் நிலையத்தில் டிஐஜி அமல்ராஜ் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் சசிகலா கணவர் நடராஜன் மீது நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் மாலதி முன்பு ஆஜர் செய்தனர்.
நடராஜனை மார்ச் 2-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இருவர் கைது
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மாலதி நடராஜனை மார்ச் 2ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் நடராஜனின் அண்ணன் சாமிநாதன், அக்காள் மகன் சின்னையா என்கிற வெங்கடேசன், கூட்டாளிகள் சுரேஷ், இளவழகன், குபேந்திரன், மாரிமுத்து ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சின்னையா என்கிற வெங்கடேசனையும், கூட்டாளி குபேந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications