இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் மீண்டும் தேர்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிபிஐ தமிழ் மாநில 22வது மாநில மாநாடு நடைபெற்றது. இன்று மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் இறுதியில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
அப்போது மாநிலச் செயலாளராக தா.பாண்டியனை மூன்றாவது முறையாக தேர்வு செய்ய மூத்த தலைவர் நல்லகண்ணு வழிமொழிந்தார்.மேலும் மாநில நிர்வாகிகளாக 138 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோர் இவர்களில் சிலர். பின்னர் அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர கட்சியின் தேசிய மாநாட்டிற்காக 110 பேரும் தேர்வாகினர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்காக 9 எம்.எல்.ஏக்களைப் பெற்றுத் தந்தமைக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காக சீரிய முறையில் பணியாற்றி வருவதற்காகவும் மீண்டும் தா.பாண்டியனை மாநிலச் செயலாளராக தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான தா.பாண்டியன், ஆரம்பத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்தவர். மேலும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர். காங்கிரஸ் சார்பில் வட சென்னை எம்.பி தொகுதியில், 1989 மற்றும் 91 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
1996ல் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் 2009ல் நடந்த தேர்தலில் இதே தொகுதியில், சிபிஐ சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.
-
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications