சிதம்பரம் பல்கலை. முன்பு மகளை வெட்டிய தந்தை-காதலித்த 'குற்றத்திற்காக'!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி முன்பு மாணவி ஒருவரை அவரது தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலவளையமாதேவியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகள் ஞானவள்ளி(21). சிதம்பரத்தில் உறவினர் வீட்டில் தங்கி அண்ணாமலைப் பல்கலையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்துவருகிறார். இந்தநிலையில் இவருக்கு திருமணம் நடத்த தந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் தாம் ஒருவரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஞானவள்ளி கூறியதால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அவரை இன்று காலை கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஞானவள்ளி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுந்தரமூர்த்தி போலீசில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications