சென்னையில் மீண்டும் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: 4 பேருக்கு வலைவீச்சு
சென்னை: சென்னையை அடுத்துள்ள கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று மதியம் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சென்னையை அடுத்துள்ள கீழ்க்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இன்று மதியம் வங்கி்க்கு முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் வங்கிக்குள் புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டி காசாளரை மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். பின்பு தாங்கள் வந்த காரிலேயே ஏறி தப்பியோடிவிட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் தான் சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடாவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் ரூ. 24 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் காரில் வந்து தான் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையர்கள் குறி்தது இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்னொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications