கணவன்களுடன் போய் வாழ மறுத்து பிடிவாதம் பிடித்த மகள்களால் தாய் தீக்குளித்து தற்கொலை
சென்னை: சென்னையில் கணவன்களிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த மகள்கள் மீண்டும் புகுந்த வீட்டுக்கு போக மறுத்ததால் மனம் உடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரம் குருவப்பா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவருடைய மனைவி கமலா (57). அவர்களுக்கு புளோரா, ரோஸி என்ற 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர். 2 மகள்களும் திருமணமானவர்கள்.
இந்நிலையில் புளோரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கமலா நொந்து கொண்டிருக்கையில் இளைய மகள் ரோஸியும் தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
2 மகள்களையும் கணவன்மார்களுடன் சேர்ந்து வாழுமாறு அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் புகுந்த வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதைப் பார்த்த அவரது மகன் பாஸ்கரன் தாயைக் காப்பாற்றச் சென்று காயம் அடைந்தார். காயம் அடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கமலா பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications