இனிக்க இனிக்கப் பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள்-ராமதாஸ்

திருச்சியில் இன்று பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை என்ற நூலை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
45 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. அதை நாங்கள் பட்டியலிட்டு இந்த அறிக்கையில் காட்டியுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளோம்.
திமுக இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள். தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உறுப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக அரசு அங்கு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அவர்கள் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார். அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழக அரசின் இந்நடவடிக்கை சரியானது அல்ல. முதல்வர் அங்கு நேரடியாக சென்று அந்த மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
2016ல், பாமக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் 120 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற தீவிர கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். இதுவரை கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறோம் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications