இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

கடந்த 1981ம் ஆண்டில் இருந்து இதுவரை அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் 90 சதவீத மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தான் பரிசீலித்து தண்டனையைக் குறைத்துள்ளார். தன்னுடைய நலனுக்காக 9 வயது சிறுவனை பலி கொடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த சுஷில் மர்முவின் கருணை மனு கடந்த 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது. கடந்த 9ம் தேதி அந்த மனுவை பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார் என்பது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 1981ம் ஆண்டு முதல் இதுவரை 91 குற்றவாளிகள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு கொடுத்துள்ளனர். அதில் 31 பேரின் மனுக்கள் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் 23 பேரின் மனுக்கள் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 18 மனுக்கள் நிலுவையில் உள்ளன. பிரதீபா இதுவரை 5 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற 3 பேரின் மனுக்களும் அடக்கம்.












Click it and Unblock the Notifications