விவசாயிகளை நக்சலாக்கி சுட்டுக் கொல்லுகிறது மாயாவதி அரசு: ராகுல்
காசியாபாத்( உ.பி): உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி மாயாவதி அரசு படுகொலை செய்வதாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காசியாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடினால் அவர்கள் நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தப்படுகிறது.
நக்சலைட்டுகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் அவர்களின் மீது துப்பாக்கி குண்டு மழைகள் பொழியப்படுகின்றன.
கடந்த ஆண்டு நொய்டா அருகே உள்ள பாட்டா பர்சாவுல் கிராமத்தில் மாயாவதி அரசால் கைப்பற்றப்பட்ட தங்களின் நிலத்துக்கு அதிக நட்ட ஈடு கேட்டு விவசாயிகள் போராடினர். ஆனால் இப்போராட்டத்தை மாயாவதி அரசு கடுமையாக ஒடுக்கியது.
தங்களது தேவைக்காக உரிமைக் குரலை விவசாயிகள் எழுப்பியது ஒரு குற்றமா?
மாயாவதி அரசின் நடவடிக்கையால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி அரசு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு எதனையும் செய்யவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 22 ஆண்டுகளில் ஆட்சி நடத்திய அனைத்து முதல்வர்களும் இந்த மாநிலத்தையே நாசப்படுத்தி சூறையாடிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமையை சீரமைக்க முடியும் என்றார் அவர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications