தீர்ப்பு வரும் வரை டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களிடம் விசாரணைக்கு தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த செல்லமுத்து உள்ளிட்ட பலரிடமும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அண்மையில் விசாரணை மேற்கொண்டனர்.
தேர்வாணைய தலைவர், ஊழியர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டோர், ஆதாயம் அடைந்தோர் என பலரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.
முறைகேடுகள் மூலம் பலரும் அரசுப் பணியில் சேர தேர்வாணைய தலைவர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இச்சோதனையும் விசாரணையும் நடைபெற்றது.
இந்நிலையில் அரசியல் சாசன அமைப்புகளில் ஒன்றான தேர்வாணையத்தின் ஊழியர்கள் மீது மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்த தடை கோரி இந்த விவகாரத்தில் சிக்கியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் லஞ்ச ஒழிப்புப் போலீசின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்று உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது.
பழிவாங்கும் போக்கு
மனுதாரர்களான பன்னீர்செல்வம், லட்சுமண் ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் தவாய், தேர்வாணைய உறுப்பினர்கள் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்றார்.
தமிழக அரசு அறிக்கை
இதற்குப் பதிலாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், லஞ்ச ஒழிப்புப் போலீஸின் சோதனையில் கிடைத்த தகவல்கள் முறைகேடுகளை உறுதி செய்வதாகக் கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் விசாரணைக்கான தடையை நீக்கவும் அவர் வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்றம் கருத்து
இருப்பினும் இடைக்காலத் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை விசாரணைக்கான இடைக்காலத் தடையை நீட்டிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications