குடும்பத் தகராறு: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இடுகாட்டில் படுக்க வைத்த தந்தைக்கு வலை
வாணியாம்பாடி: வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்களை சுடுகாட்டில் படுக்க வைத்துவிட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். கட்டிட மேஸ்திரி. அவருடைய மனைவி மலர். அவர்களுக்கு ஜெயலட்சுமி (10) என்ற மகளும், நாகராஜ் (7), தேவராஜ் (3) என்ற மகன்களும் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலர் கணவனிடம் கோபித்துக் கொணடு தான் மட்டும் ரெட்டியூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் 3 குழந்தைகளையும் வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி அதில் பூச்சி மருந்தை கலந்து 3 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவர்களை கோணமேடு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். 3 குழந்தைகளையும் சுடுகாட்டில் படுக்க வைத்துவிட்டு அவர் மட்டும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சுடுகாட்டில் குழந்தைகள் படுத்திருப்பதைப் பார்த்த மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சுடுகாட்டிற்கு சென்று 3 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சுடுகாட்டில் படுக்க வைத்துச் சென்ற பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications