சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மத்திய ரிசர்வ் படைகள் 2 நாட்களில் வரும்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 5 கம்பெனியின் 650 வீரர்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக இன்னும் 2 நாட்களில் வர உள்ளனர்.

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் மார்ச் 18ல் நடைபெற உள்ளது. இங்கு 230 தேர்தல் பூத்கள் உள்ளன. இங்கு தற்போது 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரன்கோவிலுக்கு வந்து செல்லும் வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள், லாட்ஜ்களில் வந்து செல்லும் நபர்கள் ஆகியவற்றை குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தொகுதிக்கு வரும் வாகனங்களை நேற்று முதல் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இதற்காக நெல்லை எஸ்பி விஜேயந்திர பிதாரி தலைமையில் 10 சர்வர் லைன் டீம், 10 பறக்கும் படையினர், 10 வீடியோ போலீஸ் படையினர், 5 அதிரடி படையினர், 3 கலவர தடுப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கூடுதலாக ஒரு தனிப்பிரிவு ஏட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தேர்தல் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் ஆகியவை குறித்து உடனுக்குடன் எஸ்பிக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சிறப்பு படையினரும் சந்தேகப்படும் இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். மத்திய, மாநில உளவு துறையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 5 கம்பெனியினர் மொத்தம் 650 வீரர்கள் இன்னும் 2 நாட்களில் சங்கரன்கோவிலுக்கு வர உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+