தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதி தேமுதிக வேட்பாளர் இன்ஜினியர் முத்துக்குமார் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இன்று (24ம் தேதி) மதியம் 12 மணிக்கு மேல் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் அதிகாரி தாமோதரனிடம் வேட்பாளர் முத்துக்குமார் வேட்டு மனுத்தாக்கல் செய்கிறார்.
சங்கரநாராயணசுவாமி சன்னதியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பகல் 12 மணிக்கு மேல் முத்துக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், விருதுநகர் எம்.எல்.ஏ., பாண்டியராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள், வேட்பாளர் முத்துக்குமார், உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
மதிமுக. வேட்பாளர்:
சங்கரன்கோவிலில் இன்று காலை 11 மணிக்கு மேல் தாலுகா அலுவலகத்தில் உள்ள முதன்மை உதவி தேர்தல் அலுவலர் தாமோதரனிடம் மதிமுக., வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சுவாமி சன்னதியில் உள்ள கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து காலை 11 மணிக்கு மேல் தாலுகா அலுவலகம் நோக்கி வேட்பாளர் ஊர்வலமாக வருகிறார்.
இதில் கட்சியின் பொது செயலாளர் வைகோ தலைமையில் துணை பொது செயலாளர் நாசரேத் துரை, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், மாவட்ட செயலாளர் சரவணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் கணேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications