நாகர்கோவில் அருகே பட்டதாரி பெண் கொலை: கொலையாளிகளுக்கு வலை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பட்டதாரி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் பிரபல தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. வெள்ளிச்சந்தையை அடுத்த மணவிளையைச் சேர்ந்த தவசிமணி என்பவரின் மகள் கலைவாணி (எம்.காம். பட்டதாரி) கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு சேர்ந்தார். அவருடைய கணவர் ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் களப்பணியாளர் அலுவலகத்திகற்கு சென்றுள்ளார். அப்போது கலைவாணி அந்த நிறுவனத்தின் இடதுபக்க அறை படிக்கட்டில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கலைவாணி தலையில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ரத்தம் வடிந்தோடியது. வலது காதில் அணிந்திருந்த கம்மல் கீழே கழன்று கிடந்தது. கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலிகளைக் காணவில்லை என்பது தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்பைட அமத்து கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+