கேரள இடைத்தேர்தல்: எதிர்பார்த்தபடியே முல்லைப் பெரியாறை 'கையில் தூக்கிய' இடதுசாரிகள்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் தொகுதியில் வரும் 17ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக அனுப் ஜேக்கப்பும், இடதுசாரிகள் முன்னணி சார்பாக ஜேக்கப்பும் போ்ட்டியிடுகின்றனர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் அனுப் ஜேக்கப் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்த ஜேக்கப்பின் மகன் ஆவார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப் போவதாக முத்ல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். ஆனால் இது மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரவம் தொகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடைவிடாது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரசாரத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் எழுப்பப்பட்டு வருகிறது. உம்மன் சாண்டி அரசு இந்த விஷயத்தில் கேரள மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பினரயி விஜயன் குற்றம்சாட்டி வருகிறார்.
இடது சாரி முன்னணி தலைவர்களின் பிரசாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. அதே சமயம் முதல்வர் உம்மன்சாண்டி பிரவம் தொகுதியை கேரளாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டும் வகையில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications