டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கக் கூடாது: பாரிவேந்தர் கோரிக்கை!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 49 இலட்சம். அதில்,45 விழுக்காட்டினர் பிளஸ் 2 மாணவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.
மதுபான விற்பனையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரத்து 100 கோடி வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்தைவிட, குடிபழக்கத்தால் ஏற்படும் வேலை இழப்பு, உற்பத்தி இழப்பு, உயிரிழப்பு உள்ளிட்டவைகளால் பல மடங்கிற்கு இழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கான காரணத்தை நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசுக்கு வருவாய் தரும் நிதி ஆதாரங்களில் நடைபெறும் முறைகேடுகளை சரி செய்தால், டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தைவிட பல மடங்கு வருவாயை ஈட்ட முடியும்.
டாஸ்மாக் கடைகளுக்கிடையேயான தூரத்தினை குறைந்தபட்சமாக 5 கி.மீ., என முதல் கட்டமாக அரசு கொண்டுவரவேண்டும். டாஸ்மாக் கடைகளை காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் அதிகரிக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட்டு, சுகாதாரமான அரசாக ஆட்சி செய்யவும், அதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வாழ்ந்திட வழி செய்திடும் முயற்சியில் அரசு ஈடுபடுமேயானால், அதனை இந்திய ஜனநாயக கட்சி மனதார வரவேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications