For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரம்பத்தில் கொள்கையுடன் இருந்தோம், திமுக, அதிமுகவுடன் சேர்ந்த பின் விட்டு விட்டோம்- ராமதாஸ்

Google Oneindia Tamil News

Ramadoss
மதுராந்தகம்: 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு,மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். பின்னர் தி.மு.க, அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கொண்டு ராமதாஸ் பேசுகையில்,

2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய புதிய செயல் திட்டத்தின்படி அனைவரும் செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க-விற்குக் கொண்டு வர வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு அடுத்து பலம் கொண்ட கட்சியாக பா.ம.க. உள்ளது.

1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். பின்னர், தி.மு.க, அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம்.

பா.ம.க-வை ஒழிப்பதில் தி.மு.க,அ.தி.மு.க-விற்கும் கூட்டணி உள்ளது. இதனை கடந்த எம்.பி. தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம். எனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என்று முடிவடுத்தோம் என்றார் அவர்.

English summary
PMK founder Dr. Ramadoss has said that, Vanniar sangam was launched with two targets. But we failed to keep our targets after alligned with DMK and ADMK, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X