ஆப்பிரிக்க எரிவாய் நிறுவனத்தை வாங்க ஓஎன்ஜிசி தீவிரம்
டெல்லி: உலகின் முன்னணி கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான கோவ் எனர்ஜி நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனமும் (ONGC) ஜிஎஐஎல் நிறுவனமும் (GAIL) கூட்டாக போட்டியில் இறங்கியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் இயற்கை எரிவாயுவை தோண்டி எடுக்கும் முக்கிய நிறுவனம் கோவ் எனர்ஜி. பிரிட்டன் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தை வாங்க ராயல் டச்சு ஷெல் நிறுவனம் ரூ. 8,000 கோடிக்கு விலை பேசி வருகிறது.
இதையடுத்து தாய்லாந்து அரசு நிறுவனமான பிடிடி ரூ. 8,500 கோடி வரை தந்து இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவும் இந்தப் போட்டியில் குதித்துள்ளது. மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பன நிறுவனமான ஓ.என்.ஜி.சியும், ஜிஎஐஎல் நிறுவனமும் இணைந்து கோவ் எனர்ஜி நிறுவனத்தை வாங்க ரூ. 10,000 கோடி வரை தர முன் வந்துள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவில் தான் கோவ் எனர்ஜி நிறுவனம் அதிகளவில் எரிவாயு தோண்டியெடுத்து வருகிறது. இதன் முக்கிய எரிவாயு கேந்திரமாக மொசாம்பிக் நாடு விளங்குகிறது.












Click it and Unblock the Notifications