காட்பாடி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
வேலூர்: காட்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின்(38). இவர் சித்தூர் எச்.சி.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிர்மலா(34). இவர் சி.எம்.சி. மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லெனி(7), ஏஞ்சலின்(5) என்று இரு குழந்தைகள் இருந்தனர்.
சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்டாலின் சித்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வி்ட்டு, இரவில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தார். போதபள்ளூர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்டாலின், நிர்மலா மற்றும் 2 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications