கூடங்குளம்: தமிழக அரசிடம் வல்லுநர் குழு அறிக்கை தாக்கல்- அணு உலை பாதுகாப்பானது

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார். அதன்படி கடந்த 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் எஸ்.இனியன், அணுமின் சக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என்.விஜயராகவன் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இனியன் தலைமையிலான இந்த குழுவினர் கடந்த 18ம் தேதி கூடங்குளம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் பிரதிநிதிகளையும் இனியன் குழு சந்தித்தது.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் தமது அறிக்கையை இனியன் குழு அளித்துள்ளது.
அறிக்கை விவரம்
இனியன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வல்லுநர் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. இதனிடையே போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதா நாளை சந்திக்க உள்ளனர்.
கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு ஏற்கெனவே 15 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்திருந்தது.












Click it and Unblock the Notifications