வழக்கிலிருந்து ஜெ. விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் அதிமுகவினர் பூஜை
காஞ்சிபுரம்: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட்டு விடுதலையாக வேண்டி காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் அதிமுகவினர் திரண்டு வந்து சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு பரபரப்பான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே நான்கு நாட்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டார். அவரது முன்னாள் தோழி சசிகலாவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அளித்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நேற்று காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். இந்த பூஜையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், ஒன்றியக் குழு தலைவர் தும்பவனம் ஜீவானந்தம், நகர செயலாளர் ஸ்டாலின் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வழக்கிலிருந்து விடுபட வழக்கறுத்தீஸ்வரரை கும்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications