இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 25ம் தேதி 622 விசைப் படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.
மேலும் ஜெயசிங், சகாயம், ஜீவாவாசன் உட்பட 5 விசைப்படகுகள் அதில் இருந்த தோமஸ், மிட்டல், முருகேசன், ரமேஷ், ஜேருமஸ், யோவான், கில்டோஸ், செல்லையா, சகாயம், மில்லர், ஜான் போஸ் உட்பட 22 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னாருக்கு கொண்டு சென்றனர்.
கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு நேற்று (27.2.2012) காலையில் தலைமன்னார் நீதிமன்றத்தில் 22 மீனவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது மீனவர்கள் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி 22 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து 22 பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications