வெளிநாட்டு நிதியுதவி என்று கூறி பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசியுள்ளதாக கூறி அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டியுள்ளார் உதயக்குமார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில்,
நீங்கள் அளித்த பேட்டி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த 25-ந் தேதி வெளியானது. அதில், விவசாய உற்பத்திக்கு மரபுசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் சிலர், இதை விரும்பவில்லை. இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் சில வளர்ச்சிப் பணிகளையும் அமெரிக்கா மற்றும் போலாந்து, நார்வே உள்ளிட்ட ஸ்காண்டினேவியன் நாடுகளின் பண உதவிபெறும் என்.ஜி.ஓ.க்கள் ஆதரிப்பதில்லை. இதுபோன்ற என்.ஜி.ஓ.க்கள்தான் அணுசக்தித் திட்டங்களுக்கும் எதிராக இருப்பதால், அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது.
கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சீனா போல் அல்ல. அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள், மின்சக்தி உற்பத்தியை இந்தியா அதிகரிப்பதை விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.
புகுஷிமா அணு உலை வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகும்கூட, இந்தியாவைச் சேர்ந்த அறிவுசார் சமுகத்தின் பெரும்பாலானோர், அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வரவேற்கின்றனர்' என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
இது, எனது கட்சிக்காரர் உதயகுமாரை மிகவும் பாதித்துவிட்டது. அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளத்தில் நடக்கும் போராட்டம், அமெரிக்கா மற்றும் ஸ்கேண்டினேவியா நாடுகளின் பண உதவியோடு நடைபெறுவதுபோல், மக்களிடம் நீங்கள் அந்த கருத்தை கூறியுள்ளீர்கள் என்று தெரிகிறது.
உங்களது இந்த கருத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை. உங்கள் கருத்து பொய்யானது. பொய்யான கருத்தைக் கூறியதன் மூலம், மக்களிடையே உதயகுமாருக்கு இருந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இதன்மூலம் அவரது குணநலன் பற்றி மக்கள் குறைவாக எடைபோடுகிறார்கள்.
எனவே நீங்கள் தெரிவித்த அந்த கருத்துகளை திரும்பப்பெற வேண்டும். அல்லது மாற்றி கூறவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் உதயக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications