சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தை கொஞ்சம் வலுப்படுத்துங்கள்-வைகோ
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்று பொது மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ஒரு கோடி... ஒன்றரை கோடி என்று உங்களிடம் (முதல்வர் ஜெயலலிதா) நிதி கொடுக்கிறார்களே அமைச்சர்கள்?. இந்தப் பணம் எப்படி வந்தது?.
வெளிப்படையாகவே அவர்களால் இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறதென்றால், இதைவிட நூறு மடங்கு உங்களுக்கு கப்பம் கட்டினார்களா?.
திமுக அரசில் நிர்வாகச் சீர்கேடு என்றீர்களே. இப்போது உங்கள் ஆட்சியிலும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களே... ஆனால், சென்னையைச் சுற்றிலும் பெரும் தொழிலதிபர்கள் நடத்துகின்ற நிறுவனங்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பில்லையே.. ஏன்?. எந்தக் கப்பம் உங்கள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறது?.
பிரேக் இல்லாத வாகனமாகச் சென்று கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி. அதற்கு பிரேக் போடவேண்டும் இந்தத் தொகுதி மக்கள். வெற்றி பெற்று பிரேக்கை இயக்குபவராக இருப்பார் எங்களின் வேட்பாளர் சதன் திருமலைக்குமார்.
என் கொள்கையில் தவறு இருந்திருக்கலாம். எங்கள் அணுகுமுறையில் விமர்சனம் எழுந்திருக்கலாம். ஆனால் என் சொந்த வாழ்க்கையினை சுகபோகம் ஆக்கிக் கொள்வதற்காக நான் இம்மியளவும் நெறி தவறியதில்லை. இங்கே சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்றார்.
நாஞ்சில் சம்பத் பேச்சு:
இந் நிலையில் மேலநீலித நல்லூர் ஒன்றிய மதிமுக சார்பில் சேர்ந்தமரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்,
47 ஆண்டு காலமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நோக்கத்துடன் வைகோ செயல்பட்டு வருகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆகட்டும், இலங்கைத் தமிழர் பிரச்சனை ஆகட்டும். தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது மதிமுக தான்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது வைகோ தான் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications