மீனவர்கள் கொலை வழக்கு: கோர்டுக்கு வெளியே செட்டில் பண்ணும் இத்தாலியின் கோரிக்கையை ஏற்ற இந்தியா
டெல்லி: கேரள கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேர் இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை அங்கு வந்த இத்தாலிய நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் இத்தாலி நாட்டு பாதுகாவலர்கள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கொச்சி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எண்ணெய் கப்பலை தங்களிடம் ஒப்படைக்குமாறு இத்தாலிய கப்பல் நிறுவனம் கோரியது. ரூ.3 கோடி கொடுத்துவி்ட்டு கப்பலை எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேச இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் டெர்ஸி டெல்லி வந்தார். அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து சுமூகத் தீர்வு காணலாம் என்று டெர்ஸி அறிவுறுத்தினார். இத்தாலி-இந்தியா இடையேயான உறவு பாதிக்கக் கூடாது என்று நினைத்து எஸ்.எம். கிருஷ்ணாவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நஷ்டஈடு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் இழுத்துக் கொண்டிருப்பதை விரும்பாத இந்தியாவும், இத்தாலியும் இதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications