சென்னை என்கெளன்டரில் கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களை வாங்க குடும்பத்தார் மறுப்பு
சென்னை: சென்னையில் போலீஸ் என்கெளன்டரில் கொல்லப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள வினய் பிரசாத் மற்றும் ராஜீவ் குமார் ஆகியோரின் உடல்களை வாங்க அவர்களது குடும்பத்தினர் மறுத்துள்ளனராம். இதனால் உடல்களை பீகார் போலீஸாரிடம் ஒப்படைக்கலாமா என்பது குறித்து சென்னை போலீஸார் யோசித்து வருகின்றனர்.
சென்னையில் இரு வங்கிகளில் துணிகரமாக துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய 5 வட மாநில கொள்ளையர்களை வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வைத்து போலீஸார் என்கெளன்டரில் கொன்றனர்.
இவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதில், வினோத்குமார் என்கிற சுஜாய் குமார் ரே, வினய் பிரசாத், ராஜீவ்குமாரின் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இதில் வினோத்குமார்தான் கொள்ளைக் கூட்டத் தலைவன். இவன் மீது மும்பை, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவனது உடலை குடும்பத்தினர் பெற்றுச் சென்று விட்டனர்.
ஆனால் வினய் பிரசாத், ராஜீவ் குமாரின் ஆகியோரின் குடும்பத்தினர் உடல்களை வாங்க வர முடியாது என்று தெரிவித்து விட்டனராம். செத்தால் சாகட்டும், நாங்கள் உடல்களை வாங்க வர முடியாது என்று அவர்கள் கூறி விட்டனராம்.
இதனால் உடல்களை பீகார் போலீஸாரிடம் ஒப்படைப்பது குறித்து சென்னை போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications