இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு புது பேட்டரிகள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 250 புதிய பேட்டரிகளை பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. சங்கரன்கோவிலில் 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் என்ஜினியர் குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு புதிய பேட்டரிகள் பொருத்தப்படுகிறது. பொதுவாக ஒரு இயந்திரத்தின் பேட்டரி 36 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய பேட்டரிகள் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
இதனால் தற்போது சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் சுமார் 250 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. இதற்கான தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும் சென்னையில் இருந்து பேட்டரிகள் வரவழைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications