கேரளாவில் கப்பல் மோதி படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி: 3 பேர் மாயம்
ஆலப்புழை: கேரளாவில் நடுக்கடலில் கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் பலியானார்கள், 3 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 26ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் நங்கூரம் போடப்பட்டிருந்த படகின் மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து அதில் இருந்த 7 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதில் கொல்லத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜஸ்டின் (40), சேவியர் (42) என்ற 2 மீனவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
அப்போது அந்த வழியாக வந்த படகுகளில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 பேரைக் காப்பாற்றி தொட்டப்பள்ளி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மீதமுள்ள 3 மீனவர்களைக் காணவில்லை. 4 கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படை படகுகளும், டோர்னியர் விமானம் ஒன்றும் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான மைக்கேல் கூறியதாவது,
அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. அந்த கப்பல் எங்கள் படகை இடித்தவுடன் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம். நான் கடலில் நீந்தியபோது சிறிது நேரம் சேவியர் என் கையைப் பிடித்திருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. அது இரவு நேரம் என்பதால் என்னால் கப்பலை பார்க்க முடியவில்லை. அது மிகப் பெரிய எண்ணெய் கப்பல் என்பது மற்றவர்கள் சொல்லித் தான் தெரியும். அவர்கள் எந்தவித சத்தமுமின்றி வந்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது,
கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் கடலில் விழுந்து காணாமல் போன 3 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அந்த சரக்கு கப்பலைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications