இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்க சிறப்பு படைகள் டேரா
வாஷிங்டன்: பயங்கரவாத ஒழிப்புக்கான கூட்டு நடவடிக்கைக்காக இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பசிபிக் பிராந்திய கட்டளை தளபதி அட்மிரல் ராபர் வில்லார்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தெற்காசியாவில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படுகிறது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர் இ தொய்பா மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இந்த அமைப்பின் அச்சுறுத்தலை மிகவும் பயங்கரமானதாக கருதுகிறோம். அதனால் இந்த தெற்காசிய நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.
லஸ்கர் இ தொய்பா அமைப்பானது அல்குவைதா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து ஐரோப்பியா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளில் நாசவேலைகளுக்குத் திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications