இங்கிலாந்தில் 44 ஆண்டுகளாக இயங்கி வந்த அணுமின் நிலையம் மூடல்
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 44 ஆண்டுகளாக மின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த உலகிலேயே மிகப் பழமையான அணுமின் நிலையம் நேற்று மூடப்பட்டது. அதை மூடி விட்டு அதற்கு அருகிலேயே புதிய அணுமின் நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் மேற்கே உள்ள ஓல்டுபரி பகுதியில் கடந்த 1958ம் ஆண்டு அணுமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கியது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கடந்த 1960ம் ஆண்டு முதல் அணுமின் நிலையம் தனது பணியைத் துவங்கியது.
கடந்த 44 ஆண்டுகளாக இயங்கி வந்த ஓல்டுபரி அணுமின் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 435 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டோடு ஓல்டுபரி அணுமின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்தது. ஆனால் அதன் ஆயுள் காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தின் ஆயுள் காலத்தை மேலும் அதிகரிக்க அதிக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து ஓல்டுபரி அணுமின் நிலையத்தின் உற்பத்தி நேற்று காலை 11 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த நிலையம் மூடப்பட்டது.
உலகில் இயங்கி வந்த அணுமின் நிலையங்களில் ஓல்டுபரி நிலையம் தான் பழமையானது. இந்த நிலையில் அதே பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அணுமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் 2025ம் ஆண்டு புதிய அணுமின் நிலையம் உற்பத்தியை துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications