அமெரிக்க சிறப்புப் படைகள் முகாமிடவில்லை: இந்தியா மறுப்பு
டெல்லி: இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் வில்லர்ட் கூறிய கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை நிராகரித்துள்ளன.
அமெரிக்காவின் கருத்து
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைக்காக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு ராணுவ தளபதி அட்மிரல் வில்லர்ட் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
சர்ச்சை
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு 5 தெற்காசிய நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் இந்தியாவில் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் அமெரிக்காவின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றும் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தியா மறுப்பு
அமெரிக்காவின் இக்கருத்தை இந்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications