ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் பதவி பறிப்பு
ஐதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவான 17 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்து ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் 5-ந் தேதி தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 17 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
காங்கிரஸ் புகார்
இதனால் கொறடா' உத்தரவை மீறி, காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததற்காக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவைத் தலைவர் என்.மனோகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு, பேரவைத் தலைவரின் ஆய்வில் இருந்து வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகாரை ஏற்று, ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறித்து பேரவைத் தலைவர் மனோகர் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், பிரஜா ராஜ்யம் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரு எம்.எல்.ஏ. ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமாவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஜெகன்மோகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருடைய தந்தையும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட 17 எம்.எல்.ஏ.க்களும் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தனர். அதை நேற்று பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதால், அந்த எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோனது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications