8 மணிநேர மின்வெட்டால் கோபத்தின் உச்சியில் மக்கள் - வைகோ

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைகுமாரை ஆதரித்து வைகோ தனது 2-ம் கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார். சங்கரன்கோவில் நகராட்சியின் 7 வார்டுகளில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
இந்த தொகுதியில் மக்களை சந்தித்த போது மின்சாரம் இல்லை, விசைத்தறிகள் ஓடவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் கூறுகின்றனர். இந்த தொகுதியில் 5 ஆயிரம் விசைத்தறிகளில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூலி உயர்வு கேட்டு இத்தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த அமைச்சரும் வரவில்லை.
இப்போது 32 அமைச்சர்கள் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சினையை ம.தி.மு.க. மட்டுமே தீர்க்க முடியும்.
தினமும் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை செய்யப்படுகிறது. இதனை சரிசெய்ய முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு மின்சாரம் இல்லை. மக்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது. அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழல் இல்லாத நேர்மையான அரசியலை உருவாக்க ம.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications