மாநில உரிமைகளுக்கான சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றுக: மோடி

குஜராத் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மோடி பேசியதாவது:
கொல்லைப்புற சதி
டெல்லி சர்க்காரானது (மத்திய அரசு) நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது. பொடா போன்ற சட்டங்கள் இருக்கும்போது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் எதற்கு? இத்தகைய அமைப்பு மூலம் மத்திய உளவுத்துறையானது மாநில அரசுகளை ஆதிக்கம் செலுத்துகிற நிலைதான் உருவாகும். மாநிலங்களின் உரிமைகளை கொல்லைப்புறம் வழியே பறிக்கக் கூடிய சதிச்செயல்தான் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்.
மாநிலங்களிடை கவுன்சில்
மத்திய- மாநில உறவுகளுக்கான சர்க்காரியா கமிஷனர் பரிந்துரைகளையும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நிதிசார் உறவுகள் தொடர்பான நீதிபதி மதன்மோகன் கமிஷன் பரிந்துரைகளையும் மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். மதன் மோகன் கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால் மத்திய அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையே ஆளுநராக நியமிக்கிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களிடை கவுன்சில் கூட்டத்தை ஒரு ஆண்டுக்கு இருமுறை கூட்ட வேண்டும்.
மதமோதல்கள் தொடர்பான மசோதாவும்கூட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடியதே. மதமோதல்கள் என்ற ஒற்றைவரியில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும் சதிதான் இது என்றார் மோடி.












Click it and Unblock the Notifications