டெல்லி, வட மாநிலங்களில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்

இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்பட பல பகுதிகளில் நில அதிர்வு இருந்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளான காசியாபாத், நொய்டா, குர்கான் போன்ற இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.
நில அதிர்வைத் தொடர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள், கட்டடங்கள், வீடுகளில் இருந்தோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு 5.1 ரிக்டர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சேத விவரம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
ஹரியானாவில் நிலநடுக்க மையம்
இந்த நிலநடுக்கமானது ஹரியானா மாநிலம் பகதூர்கர் என்ற இடத்தை மையமாகக் கொண்டு உருவானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதியானது டெல்லியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications