உ.பியில் தகர்ந்தது மாயாவதி சாம்ராஜ்யம்- ஆட்சியைப் பிடிக்கிறார் முலாயம் சிங்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பிற்பகலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்.
403 தொகுதிகள் உள்ள உத்தரபிரேதசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே தான் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி என்ன தான் தீவிர பிரச்சாரம் செய்திருந்தாலும் அவரது கட்சிக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாடி கட்சி தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் உள்ள முதல்வர் மாயாவதியின் சிலைகள் மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகள் ஆகியவற்றை துணியைப் போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கோடி ரூபாய் செலவில் சிலைகளுக்கு திரையிடப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் திரைகள் அகற்றப்பட்டுள்ளது.
70 தொகுதிகள் உள்ள உத்தரகண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இங்கு பாஜகவே ஆட்சியை தக்க வைக்கிறது.
117 தொகுதிகள் உள்ள பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது.
மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது.
40 தொகுதிகள் உள்ள கோவாவில் திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கு பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications