அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?: அறிவிக்கப்படாததால் நீடிக்கும் சஸ்பென்ஸ்!

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் பகல் 12 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்ச உணர்வு மற்றும் எண்ணங்கள் குறித்து ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, அரசுக்கு அளித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் பற்றியும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் அளித்த அறிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இந்த நிமிடம் வரை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
கூடங்குளம் குறித்தும், மின்தடை குறித்தும்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மின்தடையால் அரசுக்குப் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிட்ம் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பான குரலில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் மின் நிலையம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சங்கரன்கோவில் தேர்தல் முடிந்த பின்னரே அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாசு வெடிக்க காத்திருந்த திமுகவினர்
முன்னதாக அமைச்சரவையின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அதைக் 'கொண்டாடுவதற்காக' கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிக்குளம் பகுதியில் திமுகவினர் இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் முடிவை அறிந்து அதற்கேற்ப அதை கொண்டாடும் வகையில் இனிப்புகள், பட்டாசுகளுடன் இவர்கள் காத்திதருந்தனராம். இருப்பினும் அரசின் முடிவு எது என்று வெளியாகாததால் ஏமாற்றமடைந்து இவர்கள் அமைதியாகி விட்டனராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications