உ.பி தோல்வி, உத்தர்கண்ட் ஆட்சி குறித்து காங் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

இக் கூட்டத்தில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைக் கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 70 இடங்கள் கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் 32 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
பாஜக 31 இடங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களி்லும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் உத்தர்கண்ட் கிராந்தி தள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சைகள் மற்றும் உத்தர்கண்ட் கிராந்தி தள் கட்சியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 36 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். மாயாவதியுடன் பேச வேண்டியதில்லை. ஆனால், மாயாவதியை உள்ளே இழுத்தால், வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தர்கண்டில் அவருடன் கூட்டணிக்கும் அடி போட்டது போலவும் ஆகும். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
பாஜகவை மாயாவதி ஆதரிக்க வாய்ப்பில்லை என்பதால், சுயேச்சைகள் மற்றும் கிராந்தி தள் ஆதரவோடு ஆட்சியைமைக்க பாஜக முயலலாம். ஆனால், அந்த வாய்ப்பை பாஜகவுக்குத் தந்துவிடாமல் தடுக்க சுயேச்சைகளை நேற்றே வளைக்க ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். கிராந்தி தள் எம்எல்ஏவுடனும் பேசி வருகிறது.
இந் நிலையில் சோனியா தலைமையில் இன்று நடக்கும் காங்கிரஸ் உயர் மட்டக் கூட்டத்தில் உத்தர்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.
உத்தர்கண்ட் விவகாரத்தை முடித்துவிட்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவாவில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணங்கள் குறித்தும் இக் கூட்டம் ஆய்வு செய்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications