முத்தரப்பு பேச்சில் உடன்பாடு- டேங்கர் லாரி உரிமையாளர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், டெண்டரில் கூடுதலாக பங்கேற்ற லாரிகளுக்கு வேலை வழங்கவும் கோரி கடந்த மாதம் 29-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. நேற்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையில் கடந்த 3-ந் தேதி தமிழக அரசு அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஆயில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் நேற்றும் இப்பேச்சுவார்த்தை நடந்தது.
உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் பஷீர் அகமது தலைமையிலான இப் பேச்சுவார்த்தையில், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணைப் பொதுமேலாளர்கள் தாக்கூர், பட்டாச்சாரியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மேலாளர் பிரதீப், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணைப் பொதுமேலாளர் ஜெயக்குமார் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நேற்று மாலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நடைபெற்றது..
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக நள்ளிரவில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications