மீண்டும் பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல் - மார்ச் 14-ல் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

சண்டிகரில் சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்பாக பாதலின் மகனும் அகாலிதளக் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், எங்களது கட்சியின் ஒரே முதல்வர் வேட்பாளர் பிரகாஷ் சிங் பாதல்தான் என்று கூறியிருந்தார். "பிரகாஷ்சிங் பாதல்தான் முதல்வர் என்பதை கட்சியின் தலைவராக அறிவிக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 1970,77,97, 2007 ஆகிய ஆண்டுகளில் பஞ்சாப் மாநில முதல்வராக பிரகாஷ்சிங் பதவி வகித்தவர். 5-ம் முறையாக மார்ச் 14-ந் தேதி அவர் மீண்டும் முதல்வராகப் பொறுய்ப்பேற்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கான தேர்தலில் 117 இடங்களில் 68 இடங்களை சிரோன்மணி அகாலிதளம் பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications