சங்கரன்கோவிலில் ரூ.7,000 மதிப்புள்ள 100 சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சங்கரன்கோவில் தொகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ரூ.7,000 மதிப்புள்ள 100 சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவிலில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேவர்குளம் சோதனைச்சாவடியில் தாசில்தார் முகமது யூசுப் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டபோது அதில் 100 சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் இருந்தன. ரூ.7,000 மதிப்புள்ள இந்த பொட்டலங்களை உரிய காரணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிரியாணி பொட்டலங்களை எடுத்து வந்த முகமது சஹீத், இசக்கிமுத்து ஆகியோர் மீது தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பிரியாணி பொட்டலங்கள் தேவர்குளத்தில் அமைந்துள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அளிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+