5 மாநில தேர்தல்: மக்கள் விரோத கொள்கையினால் காங். படுதோல்வி- சீமான்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி பெரிய நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவி்ட்டனர். இதுவே 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணமாகும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை அடைந்தது. தற்போது மற்ற மாநிலங்களிலும் அதன் எதிர்காலம் இருண்டு போய்விட்டது. இந்த நிலையில் 2014ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இது பிரதிபலிக்கும்.
மாநில மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்பது உறுதி. மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் எந்தக் கட்சியானாலும் இதே போன்ற முடிவையே எதிர்காலத்திலும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது நிச்சயம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications