32 அமைச்சர்களையும் கண்காணிக்க 35 குழுக்கள்: தேர்தல் ஆணையம் அதிரடி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த குழு அமைச்சர்களை பி்ன்னாடியே போய் தொடர்ந்து கண்காணிக்கும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் 10ம் தேதிக்கு மேல் சங்கரன்கோவில் தொகுதியில் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக சார்பில் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்க தனி குழு அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் செல்வராஜ் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் தொகுதிக்கு மத்திய, மாநில அமைச்சர்கள், அனைத்து கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போது அவர்களை கண்காணிக்க தனி குழுவை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட புதிய குழுக்கள் இன்று (8ம் தேதி) முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து 35 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தாசில்தார், ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications