முதல்வருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தால் குடும்பத்தோடு சாக தயார் - நடராஜன்
தஞ்சை: சொத்து குவிப்பு வழக்கில் எங்களின் மீது முதல்வருக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், குடும்பத்தோடு விஷம் கொடுத்து எங்களைக் கொன்றுவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரில், நடராஜன் மீதும் நடராஜன் டிரைவர் பிரபு, அவருடைய மாமா சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு நடராஜனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் ஜெஎம் 2 நீதிமன்ற நீதிபதி முருகனிடம், நடராஜனை போலீசார் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து போலீசாரால் வெளியே கொண்டு வரப்பட்ட நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. நான் சிறையில் இருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த நன்மையும் இல்லை. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது இன்னொரு பொய் வழக்கை போலீசார் போட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவுக்கு சம்மந்தம் இல்லை. அதற்கு நான் தான் பொறுப்பு என்று எனது மனைவி சசிகலா அனைத்து சுமைகளையும் ஏற்று கொண்டார்.
முதல்வருக்கு சந்தேகமிருந்தால் சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும். அந்த விஷத்தை குடித்துவிட்டு நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்.
பெங்களூரு நீதிமன்ற வழக்கில் எனது மனைவி சசிகலா, ஹனுமான் போல நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எனவே எங்கள் மீது முதல்வருக்கு சந்தேகமோ, பயமோ தேவையில்லை என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications