மாநில மொழிகளில் உயர் கல்வி நுழைவு தேர்வு- ராமதாஸ் கோரிக்கை

அதில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் உங்கள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையே இந்த தேர்தல் வெற்றி காட்டுகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக நீங்கள் பாடுபட்டு வருகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். உங்களுக்குள்ள நீண்ட அனுபவத்தின் உதவியுடன் உத்தரப்பிரதேச மக்களுக்கு நீங்கள் நல்லாட்சி வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் அகிலேஷ் சிங் யாதவுக்கு ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக உங்கள் தந்தை பாடுபட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
மாநில மொழிகளில்..:
தமிழக மாணவர் சங்கம் சார்பில், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபுரதன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ராமதாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். 6 லட்சம் மாணவர்கள் தமிழில் தேர்வை எழுதுகிறார்கள். ஆனால், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால், தமிழ் வழி மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை தமிழ் வழியிலும் நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோரிக்கையை வலியுறுத்த தமிழக ஆட்சியாளர்களும் முன்வர வேண்டும். மேலும், தமிழ் வழியில் மட்டும் அல்லாது 22 மாநில மொழிகளிலும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.
இந்த தேர்வை தமிழ் வழியில் நடத்துவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. வினாத்தாளை மொழி மாற்றம் செய்தாலே போதும். திருத்துவதும் சுலபம். ஏன் இதை செய்ய கூடாது?. உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.யில் 13,000 இடங்களும், எம்.ஐ.டி.யில் 20,000 இடங்களும், இந்திய வேளாண் கல்லூரிகளில் 15,000 இடங்களும் உள்ளன.
இந்த உயர்கல்வியில் கிராமப்புற மாணவர்கள் இடம் பெறக் கூடாது என்று அரசியல் சட்டம் சொல்கிறதா?. திராவிட கட்சி ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள். ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு டாஸ்மாக் வருமானமும், அதன் மூலம் இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் கவலை.
ரயில்வே மந்திரியாக மம்தா பானர்ஜி இருந்தபோது, ரயில்வே தேர்வை ஆங்கிலம், இந்தி, உருது, அந்தந்த பிராந்திய மொழிகளில் எழுதலாம் என்று கூறினார். ஏன் இதை உயர் கல்வி நுழைவுத் தேர்விலும் கொண்டு வரக்கூடாது?.
தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கி இருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. தமிழ் மொழி பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. இன்றைய போராட்டம் கிளர்ச்சியின் தொடர்ச்சிதான் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications