தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் கேட்டு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பாய்லர் தொழிற்சாலை நிறுவனம் (பெல்), நெய்வேலி அனல்மின் நிறுவனம், தேசிய நீர்மின் கழகம் போன்றவை செயல்படுத்த வேண்டிய மின் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படாமல் தாமதப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமாளிக்க பிற மாநிலங்களில் இருந்து விலைக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
சில மாநிலங்களில் இருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆனால் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் தொடர் பாதைகள்' கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு மின்சாரத்தை கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் 203 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்கு கொண்டு வர முடியும். உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 727 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தமானது. ஆனால் தேசிய நீர்மின் கழகம் இதை கிடைக்கவிடாமல் தடுக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1,750 மெகாவாட் மின்சாரம் பெற தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் மின் தொடர் பாதை' வழியாக 350 மெகாவாட் மின்சாரமே கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என்று மத்திய அரசின் மின் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவரிக்க முடியாத சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின்வெட்டு பிரச்சினைக்கு மின் தொடர் பாதைகள்' கிடைக்காததே காரணம் ஆகும். மின் தொடர் பாதைகள்' பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இப்பாதையை நிர்வகிக்கும் ஆணையத்துக்கு பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இது மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி இந்த ஆணையத்துக்கே பல சமயங்களில் பிரச்சினையாகி இருக்கின்றது.
எனவே, இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு தேவையான 1000 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர மின் தொடர் பாதைகள்' பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று 14.6.2011 அன்று தங்களிடம் நேரில் மனு அளித்தேன்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் மின் உற்பத்தியை தொடங்கும் வரை ஒரு வருடத்துக்கு கூடுதல் மின்சாரம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதில் சமீபத்தில் தமிழகத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தமிழகத்தில் நிலவும் அதீத மின்பற்றாக்குறையை சமாளிக்க பயன்படாது.
எனவே, நான் ஏற்கனவே தங்களிடம் கேட்டுக் கொண்டபடி தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவிலேயே 1000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்க தாங்கள் தலையிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications